சமையலறை கு‌றி‌ப்புக‌ள் பகுதி - 3

 photo samaiyalaraikurippukal_zps322c5f12.jpg


  • காலை‌யி‌ல், இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

  • தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

  • பூரி சு‌ட்ட ‌சி‌றிது நேர‌த்‌திலேய நமத்து போ‌ய் தோசையா‌கி‌விடாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

  • பிரட்டை ஸ்லைஸ் செய்யாமல் வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

  • சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.

  • பரோ‌ட்டா செ‌ய்யு‌ம் போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை 

  • ‌வீ‌ட்டி‌ல் எ‌ப்போதாவது பரோ‌ட்டா செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌சில குளறுபடிகளையு‌ம் செ‌ய்து‌விடுவோ‌ம்.

  • அதை த‌வி‌ர்‌க்க ‌சில யோசனைக‌ள்

  • பரோ‌ட்டா‌வி‌ற்கு உ‌ள்ளே மசாலா வை‌த்து செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இ‌ல்லை எ‌ன்றா‌ல் பரோ‌ட்டா ஊ‌றி பொத பொத எ‌ன்று ஆ‌கி‌விடு‌ம்.

  • முள்ளங்கி வை‌த்து பரோட்டா செ‌ய்தா‌ல், மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் அ‌திக ‌நீ‌ர் இரு‌க்கு‌ம், அதனை த‌னியாக எடு‌த்து‌விடவு‌ம். அதன் தண்ணீரை ‌வீணா‌க்காம‌ல் அதிலேயே பரோ‌ட்டா‌வி‌ற்கு மாவு பிசையலாம்.

  • தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்டஃப்பிங் செய்து பரோட்டா செய்தால், பரோட்டா நன்றாகவும் இருக்கும் உடலு‌‌க்கு‌ம் ந‌ல்ல‌து.

  • இது வட இ‌ந்‌திய‌ர்க‌ள் அ‌திகமாக செ‌ய்யு‌ம் சமைய‌ல் முறையாகு‌ம். எதையு‌ம் நா‌ம் த‌னியாக ஒது‌க்காம‌ல், எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்து பா‌ர்‌ப்போ‌ம். ச‌ரியாக வரு‌ம்வரை அதை ‌விடுவ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ப்போ‌ம்.

0 comments:

Post a Comment

Flag Counter